விருதுநகர் அருகே நான்கு வழிச்சாலை தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்தார்.
விருதுநகர் அருகே தம்மநாயக்கன்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்த ராயப்பச்சாமி என்பவரின் மகன் ராஜதுரை(30). இவர் விருதுநகரிலிருந்து அவரது கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாராம். அப்போது, ஆர்.ஆர்.நகர் நான்கு வழிச்சாலையில் மின்சார வாரியம் எதிரே தடுப்புச் சுவரில் எதிர்பாரத விதமாக மோதியதில் தூக்கி வீசியது. இதில், ராஜதுரை படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாராம்.
இது குறித்து வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் ராயப்பசாமி புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.